
தமிழ் பதிவுலக எழுத்தாளர்கள் அனைவருக்கும் எமது அன்பு வணக்கங்கள்,
சுயமாக பல தகவல்களை பதிவிடுவதில் இன்று மிகப்பெரும் எண்ணிக்கையில் எழுத்தாளர்கள் ஈடுபட்டுவருகின்றனர். இந்த நிலையில் அவர்களின் எழுத்தாற்றல்கள், அவர்களின் எழுத்துக்கள் மூலம் மற்றவர்கள் அடையும் நன்மைகள், தகவல்களை மற்றவர்களுடன் பரிமாறுதல் போன்ற சிறந்த விடயங்கள் வலையுலகில் இடம்பெற்றுவருகின்றது.
அத்தோடு பல எழுத்தாளர்கள், சிந்தனாவாதிகள் இணைந்து ஒரு நண்பர்குழுவாக தமது கருத்துக்களை பகிரவும் பதிவுலகம் அவர்களுக்கு சந்தர்ப்பங்களை வழங்குகின்றது.
இந்த நிலையில் இவ்வாறு எந்தவித இலாபகரமான நோக்கமும் இன்றி, தனது கருத்துக்களை மற்றவர்களுடன் பகிர்ந்து தான் பெற்ற அறிவை மற்றவர்களுக்கும் வழிகாட்டும் ஒரு வலைப்பதிவு எழுத்தாளனுக்கு உரிய கௌரவத்தை கொடுப்பதற்காகவே நாம் சில, கவிஞர்கள். எழுத்தாளர்கள், பேராசிரியர்களை கொண்டு இந்த வலையமைப்பினை அமைத்துள்ளோம்.
ஒரு எழுத்தாளனுக்கு கிடைக்கும் உயரிய கௌரவம் அவனை ஒரு அமைப்போ, இல்லது அவன் திறமைகளை ஆராய்ந்த ஒரு குழுவோ பாராட்டும் போதுதான் கிடைக்கும் என்பதை நாம் அறிந்துள்ளோம்.
அந்த வகையில் இன்றைய இளைஞர்களின் பதிவுகளின் தரத்தை உயர்த்தும் நோக்குடனே நாம் இந்த வலைப்பதிவர்களுக்கான “நட்சத்திர விருதை” சிறந்த வலைப்பதிவாளர்களுக்கு வழங்கவுள்ளோம்.
அதற்கு வலைப்பதிவுலகம் எமக்கு உதவிகளை நல்கும் என எதிர்பார்க்கின்றோம்.
நன்றி.
ப.அன்பரசு M.A