Saturday, August 1, 2009

நட்சத்திரப்பதிவாளர் தெரிவு ஆகஸ்ட் 04. நள்ளிரவுடன் முடிவு


தமிழ்வலைப் பதிவாளர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்,

தமிழ் வலைப்பதிவாளர்களின் எழுத்தார்வத்தினையும், அவர்களின் எழுததுக்களுக்கான கௌரவத்தை கொடுக்குமுகமாகவும் ஏற்படுத்தப்பட்ட இந்த விருதுவழங்கும் திட்டத்திற்கு வலைப்பதிவாளர்களின் பேராதரவுக்கு எமது நன்றிகள்.
அடுத்து இந்த ஜூலை மாதத்திற்கான சிறந்த வலைப்பதிவாளர்களை தெரிவு செய்யும் பணியில் எமது அறிவிக்கப்பட்ட நிர்வாகக்குவினர் முழு மூச்சாக ஈடுபட்டுள்ளனர். இதேவேளை பெருந்தொகையான வலைப்பதிவுகள் பற்றிய சிபாரிசுகள் எமக்கு கிடைத்துள்ளமையினால் எதிர்வரும் 05ஆந் தேதி, விருதுபெறும் வலைப்பதிவர்கள் யார்? ஏன்ற விபரம் உங்களுக்குத் தெரிவிந்துவிடும்.

இந்த விருது எம அமைப்பினரால் வழங்கப்படும் முதலாவது விருது என்பதனாலும், இந்த விருது தனியே தமிழ்நாட்டு வலைப்பதிவாளர்களுக்கு மட்டும் என ஒரு வட்டத்தினுள் நின்றுவிடக்கூடாது என எமது காப்பாளர்கள் அறிவித்துள்ளமையினால் இந்த முறை நடுவர்களின் அய்வுகளின் பின்னர் தமிழ்நாட்டு தமிழ் பதிவாளர் ஒருவர் மற்றும் தமிழ்நாடு அல்லாத ஒரு வலைப்பதிவர் என்ற ரீதியில் இந்த விருது வழங்கப்படவுள்ளதையும் உங்களுக்கு அறிவிப்பதில் பெருமகிழ்வெய்துகின்றேன்.

விருதுக்கான தெரிவுகள் எதிர்வரும் ஆகஸ்ட் 04ஆந்த தேதி நள்ளிரவுடன் முடிவடையும், இன்னும் தரமானதாக உள்ளது என நீங்கள் நினைக்கும் வலைத்தளங்களை விருதுகளுக்கு சிபாரிசு செய்யாவிட்டால், உடன் அந்த வலைப்பதிவுகளின் முகவிரியினை மின்னஞ்சல் இடுங்கள்
மின்னஞ்சல் முகவரி starblogwriter@gmail.com
- P.Anbarasu . M.A